"தண்டவாளத்தின் நடுவே விழுந்து கிடந்த பாறாங்கற்கள்" ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தண்டவாளத்தின் நடுவே இரண்டு பெரிய பாறாங்கற்கள் விழுந்து கிடந்த நிலையில், அதைப் பார்த்துவிட்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நேற்று இரவு கனமழை பெய்த நிலையில், கொடைரோடு ரயில் நிலையத்திற்கும் அம்பாத்துரை ரயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தின் நடுவே இரண்டு பெரிய பாறைகள் கிடந்தன.
அந்த வழியாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநர், தண்டவாளத்தில் பாறைகள் கிடப்பதை பார்த்து சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.
ஓட்டுனர் மற்றும் பயணிகள் இறங்கி தண்டவாளத்தின் நடுவில் கிடந்த பாறைகளை மிகவும் சிரமப்பட்டு அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டு சென்றது.
Comments